அன்றாடம் புதிய உச்சம் காணும் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.480 அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை அன்றாடம் புதிய உச்சம் கண்டு வருகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.7000-க்கு விற்பனையான நிலையில் சென்னையில் இன்று (செப்.25) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,060-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.56,480-க்கு விற்பனையாகிறது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன், உள்நாட்டிலும் வரும் நாட்கள் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் வரவிருப்பதாலும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இத்தகையச் சூழலில் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,060-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.56.480-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனையாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

28 mins ago

வணிகம்

6 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்