தொடர்ந்து உயரும் தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.7000-ஐ நெருங்கியது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இன்று (திங்கட்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,980-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.55,840-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.55,840-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,980-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.98 என விற்பனையாகிறது.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை அன்று தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. அன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.600 அதிகரித்து ஒரு பவுன் ரூ.55,680-க்கு விற்பனையானது. இந்தச் சூழலில் தற்போது மேலும், விலை அதிகரித்துள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ள போதிலும் விலை உயர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்