கென்யா குறித்த அறிக்கை போலி: அதானி குழுமம் விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கென்யாவின் நைரோபியில் உள்ளஜோமோ கென்யட்டா சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு இயக்குவது தொடர்பாக அந்நாட்டு அரசு அதானி குழுமத்துடன் ஒப்பந்து செய்தது.

இதை எதிர்த்து மனித உரிமைஅமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.மேலும்மின் பரிமாற்றம் தொடர்பாகவும் அதானி குழுமத்துடன் கென்யா அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இதை எதிர்த்து அங்கு போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், அதானி குழுமத்தின் பெயரில் ஒரு அறிக்கைஊடகங்களில் வெளியானது. அதில், “கென்யா அரசின் திட்டங்களை முறைப்படி பெற்றுள்ளோம். ஆனால் எங்கள் நிறுவனத்தின் புகழைக் கெடுக்கும் வகையில் போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலை தொடர்ந்தால், எங்கள்நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றவர்களின் பெயரை வெளியிடுவோம்” என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, அதானி குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் நிறுவனத்தின் பெயரில் ஊடகங்களில் வெளியான அறிக்கை போலியானது. இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் நிறுவனம்வெளியிடும் அறிக்கைகள் எங்களுடைய இணையதளத்திலும் இடம்பெற்றிருக்கும். அதனுடன் சரிபார்த்த பிறகு எங்கள் நிறுவனம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE