சீனாவை முந்தும் இந்திய பங்குச் சந்தை: மோர்கன் ஸ்டான்லி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய பங்குச் சந்தை மீதான மோர்கன் ஸ்டான்லி நிறுவனத் தின் மதிப்பீடு 2020-ம் ஆண்டு 9.2 சதவீதமாக இருந்தது. தற்போது அது 19.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே சீன பங்குச் சந்தை மீதான மதிப்பீடு 2020-ல் 39.1 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது அது 24.2 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில், விரைவிலேயே இந்திய பங்குச் சந்தை மீதான மதிப்பீடு சீனாவை விட அதிகரிக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி குறிப்பிட்டுள்ளது.

அந்நிய பங்கு முதலீடு அதிகரித்து வருவதால் இந்திய பங்குச்சந்தை மீதான மதிப்பீடு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நடப்பாண்டில் இதுவரையில், இந்தியப் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.53,100 கோடி முதலீடு செய்துள்ளனர். 2023 டிசம்பர் மாதத்தில் இந்தியபங்குச் சந்தையின் மதிப்பு 4 டிரில்லியன் டாலராக இருந்தது. 2024 மே மாதத்தில் அது 5 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. அதே போல், கடந்த 3 மாதங்களில் இந்திய பங்குச்சந்தை மதிப்பு 0.5 டிரில்லியன் டாலர் அதிகரித்து 5.5 டிரில்லியன் டாலராக உள்ளது. தற்போது உலகின் 4-வது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உள்ளது. 54 டிரில்லியன் டாலரைக் கொண்டு அமெரிக்கப் பங்குச் சந்தை முதல் இடத்திலும், 10 டிரில்லியன் டாலரைக் கொண்டு சீனா 2-வது இடத்திலும், 6.2 டிரில்லியன் டாலரைக் கொண்டு ஜப்பான் 3-வது இடத்திலும் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்