ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 10% அதிகரிப்பு!

By செய்திப்பிரிவு

சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ.30,900 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.38,400 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.93,600 கோடி, செஸ் வரி ரூ.12,100 கோடி வசூல் ஆகி உள்ளது. இது உள்நாடு மற்றும் இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் ஆகும்.

கடந்த 2023-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் மூலம் கிடைத்த வருவாய் ரூ.1.59 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஜூலையில் ரூ.1.82 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் சுமார் 9.2 சதவீதம் அதிகரித்து ரூ.1.25 லட்சம் கோடியும், இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் 12.1 சதவீதம் அதிகரித்து ரூ.49,976 கோடியும் ஈட்டப்பட்டுள்ளது.

ரூ.24,460 கோடி மதிப்பிலான ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 38 சதவீதம் அதிகரித்துள்ளது. ரீஃபண்ட்களை ஈடு செய்த பிறகு நிகர ஜிஎஸ்டி வருவாய் 6.5 சதவீதம் அதிகரித்து ரூ.1,50,501 கோடியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE