குரல் மூலம் யுபிஐ பணப் பரிவர்த்தனை அறிமுகம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: யுபிஐ சேவையில் குரல் வழி பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இனி வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு தங்கள் மொபைல் எண் அல்லது யுபிஐ எண்ணை தட்டச்சு செய்ய தேவையில்லை. குரல் மூலமாகவே அவற்றை உள்ளீடு செய்து பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

மும்பையில் நேற்று நடைபெற்ற சர்வதேச ஃபின்டெக் விழாவில் என்பிசிஐ, ஐஆர்சிடிசி, கோரோவர் ஆகிய தளங்கள் இந்த வசதியை அறிமுகம் செய்தன.

துரிதமான, தடையற்ற பரிவர்த்தனை சேவையை வழங்கும் நோக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மிகப் பெரும் புரட்சியைஏற்படுத்தியது. இந்நிலையில், யுபிஐ சேவையை மேம்படுத்துவம் வகையில், புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த வசதி ஐஆர்சிடிசி தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வாடிக்கையாளர்கள் குரல் வழி பரிவர்த்தனை மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE