வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுமா? - சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: அமெரிக்க மத்திய வங்கியில் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுவதை பொறுத்து வரும் நாட்களில் தங்கத்தின் விலை நிலவரம் தீர்மானிக்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம்தேதி பவுன் ரூ.42,280 என்ற அளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம்விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 எனும் புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதன் பின்னர் ஜூலை 17-ம் தேதி ரூ.55,360 எனும் புதிய உச்சத்தை அடைந்தது.

இந்நிலையில் ஜூலை 23-ம்தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்தியபட்ஜெட்டில் தங்கத்தின் மீதானஇறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் காலை பவுன் ரூ.54,480 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகலில் விறுவிறுவென குறைந்து ரூ.52,400-க்கு விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விலை ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது. இந்நிலையில், நேற்று விலையில் மாற்றம் ஏதுமின்றி பவுன் தங்கம் ரூ.53,720-க்கும், கிராம் ரூ.6,715-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.57,360-க்குவிற்பனையானது. வெள்ளி விலையிலும் மாற்றமின்றி கிராம் ரூ.93.50 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.93,500-ஆகவும் இருந்தது. அதே நேரம், கடந்த 24 முதல் 27-ம் தேதி வரையிலான 4 நாட்களுமே தங்கம் விலை மாற்றமின்றி காணப்பட்டது. இந்த நாட்களில் 2 நாட்கள் மட்டுமே சந்தை விடுமுறை இருந்தது. அதன் பின்னர் நேற்று முன்தினம் சற்று அதிகரித்த தங்கம் விலை நேற்றும் மாற்றமின்றி தொடர்ந்தது. இதேபோல் 27-ம் தேதி முதல் நேற்று வரை வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இது தொடர்பாக சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது:

விலை மாற்றமின்மைக்கு காரணம் ஏதுமில்லை. பொருளாதாரம், சந்தை போன்றவற்றில் ஏதேனும் ஒரு காரணி தாக்கத்தை ஏற்படுத்தும்போது தான் விலையில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு விலை மாறாமல் இருந்தால் சந்தைநிலையாக இருக்கிறது என பொருள் கொள்ளலாம். அதே நேரம், அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்காவின் பெடரல் வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனை நடைபெறுகிறது. இதில் ஏற்படும் முடிவைப் பொறுத்து தங்கத்தின் விலையில் சற்று அதிகமாக மாற்றம் ஏற்படக்கூடும். வட்டி விகிதத்தை குறைத்தால் தங்கத்தின் விலை உயரும். வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கத்தின் விலை குறையும். அதுவரை விலை ஏற்ற இறக்கமாகவோ, மாற்றமின்றியோ தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

மேலும்