புதுடெல்லி: ரூ.4.27 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் உலகின் டாப் 10 வாகன உற்பத்தி நிறுவனங்கள் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் இடம்பிடித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. இதன் சந்தை மதிப்பு கடந்த ஜூலை 31-ம் தேதி ரூ.4.27 லட்சம் கோடியாக (51 பில்லியன் டாலர்) அதிகரித்தது. இதன் மூலம் நாட்டின் அதிக சந்தை மதிப்பு கொண்ட வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்தது. டாடா மோட்டார்ல் பங்கு விலை இந்த ஆண்டில் 50 சதவீதமும் கடந்த 2023-ம் ஆண்டில் 101 சதவீதமும் உயர்ந்ததால் இது சாத்தியமானது.
இதுமட்டுமல்லாமல் சர்வதேசஅளவிலான டாப் 10 வாகன உற்பத்தி நிறுவனங்கள் பட்டியலிலும் டாடா மோட்டார்ஸ் இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் டெஸ்லா 711 பில்லியன் டாலர் மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளது. டொயோட்டா (307 பில்லியன் டாலர்), பிஒய்டி கம்பெனி (92 பில்லியன் டாலர்), பெராரி என்வி (74 பில்லியன் டாலர்)மெர்சிடிஸ் பென்ஸ் குழுமம் (71 பில்லியன் டாலர்) ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
ஸ்டெல்லன்டிஸ் என்வி, ஜெனரல் மோட்டார்ஸ், மாருதி சுசூகி இந்தியா, மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, போர்டு மோட்டார், ஹுண்டாய் மோட்டார் மற்றும் கியா கார்ப்பரேஷன் ஆகிய முன்னணி நிறுவனங்களை டாடா மோட்டார்ஸ் பின்னுக்குத் தள்ளி உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
58 mins ago
வணிகம்
7 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago