புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் பைனான்ஸ் இதழ், உலக நாடுகளின் ரிசர்வ் வங்கி கவர்னர்களின் செயல் பாடுகளை மதிப்பீடு செய்து பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், ஏ மதிப்பீடு பெற்று டாப் 3 பட்டியலில் இடம் பிடித்துள்ளார். டென்மார்க் மத்திய வங்கி கவர்னர் கிரிஸ்டியன் தாம்சன் மற்றும் சுவிட்சர்லாந்து மத்திய வங்கி கவர்னர் தாமஸ் ஜோர்டன் ஆகிய இருவரும் டாப் 3 பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி இலக்கு, நாணயத்தின் நிலைத்தன்மை, வட்டி விகிதத்தை சரியாக நிர்வகித்தல் ஆகியவற்றின் அடிப்படையில்குளோபல் பைனான்ஸ் இதழ்மத்திய வங்கிகளின் கவர்னர்களை மதிப்பீடு செய்கிறது.
சென்ற ஆண்டு பட்டியலில் சக்திகாந்த தாஸ் டாப் 3 பட்டியலில் இடம்பெற்றார். இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இவ்வாண்டும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்,“சக்திகாந்த தாஸ் 2-வது முறையாக,இந்த அங்கீகாரத்தைப் பெறுகிறார்.அவரது தலைமைத்துவத்துக்கும் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம் இது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். சக்திகாந்த தாஸ் 2018-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago