ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்: ஒரு நிமிடத்தில் 700 ராக்கி கயிறுகள் விற்பனை - பிளிங்கிட், ஸ்விக்கி சாதனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சகோதரர் - சகோதரிகளுக்கு இடையிலான பாசப்பிணைப்பைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை நேற்று வடமாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ரக்‌ஷா பந்தன் பண்டிகையின்போது கையில் கட்டப்படும் ராக்கிகயிறு விற்பனை நேற்று ஆன்லைன் மூலம் அமோகமாக நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. வீட்டுக்குத் தேவையான அன்றாட பொருட்களை வீடு தேடி வந்து ஒப்படைக்கும் பிளிங்கிட், ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள், நிமிடத்துக்கு 700 ராக்கி கயிறு விற்பனை கண்டதாக நேற்று கூறியுள்ளன. ஒருராக்கி கயிறு ரூ.15 என்று வைத்துக்கொண்டால் நிமிடத்துக்கு ரூ.15,000 வரை இந்நிறுவனங்கள் மூலம் விற்பனை கண்டுள்ளன.

இது பற்றி பிளிங்கிட் நிறுவனதலைமை செயலதிகாரி அல்பிந்தர்திண்ட்சா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘இதுவரை ஒருநாள் விற்பனையில் கண்டிராத உச்சபட்ச ஆர்டர்களை நேற்று பிளிங்கிட் நிறுவனம் சில நிமிடங்களில் கண்டது. ஒரு நிமிட இடைவெளிக்குள் 693 ராக்கி கயிறுகள் ஆர்டர் செய்யப்பட்டதன் மூலம் அதிகபட்ச ஒரு நிமிட ஆர்டர்கள் என்கிற புதிய சாதனையை எட்டியுள்ளோம். அதிக எண்ணிக்கையில் சாக்லேட்களும் விற்பனையாகின.

ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச அளவில் ஆன்லைன் விற்பனையை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறோம். இனி அமெரிக்கா, கனடா,நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்சுமற்றும் ஜப்பான் ஆகிய 6 அயல்நாடுகளுக்கும் பிளாங்கிட் சேவைசெயல்படத் தொடங்கும். பிளாங்கிட் சேவையை நம்பி பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி’’ என கூறியுள்ளார்.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பனி கிஷான் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘கடந்த ஆண்டுபோலவே இந்த ஆண்டும் நிறைய ராக்கி விற்பனை ஆகும் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால், கடந்த ஆண்டைவிடவும் 5 மடங்கு கூடுதல் ராக்கி விற்பனை கண்ட பூரிப்பில் இருக்கிறோம்’’ என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE