சில்லறை பணவீக்கம் ஜூலையில் 3.54% ஆக குறைந்தது!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக சில்லறை பணவீக்கம் கடந்த மாதம் (ஜூலை) 3.54% ஆக குறைந்ததாக இந்திய நுகர்வோர் விலை குறியீடு தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு தரவுகள் இன்று (ஆக.12) வெளியிடப்பட்டன. அதன்படி, ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக 3.54% ஆக குறைந்துள்ளது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பணவீக்கம் ஜூலை 2023 ல் 7.44% ஆக இருந்துது. அது 2024 ஜூலையில் 3.54% ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கத்தை 4% ஆக குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், இலக்கை விட குறைந்துள்ளது.

ஜூலை 2023 இல் 7.20% ஆக இருந்த நகர்ப்புற பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.98% ஆகக் குறைந்துள்ளது. ஜூலை 2023 இல் 7.63% ஆக இருந்த கிராமப்புற பணவீக்கம் ஜூலை 2024 இல் 4.10% ஆகக் குறைந்துள்ளது. உணவுப் பணவீக்கத்தைக் காட்டும் ஒருங்கிணைந்த நுகர்வோர் உணவு விலைக் குறியீடும் (CFPI) சரிவைக் கண்டுள்ளது. இது ஜூலை 2023 இல் 11.51% ஆக இருந்த நிலையில், ஜூலை 2024 இல் 5.42% ஆக குறைந்துள்ளது.

நகர்ப்புற உணவுப் பணவீக்கம் ஜூலை 2023 இல் 12.37% ஆக இருந்த நிலையில், 2024 ஜூலையில் 4.63% ஆகக் குறைந்துள்ளது. ஜூலை 2023 இல் 11.04% ஆக இருந்த கிராமப்புற உணவுப் பணவீக்கம் 2024 ஜூலையில் 5.89% ஆகக் குறைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

மேலும்