நெருக்கடியில் குஜராத் வைர நிறுவனங்கள்: 10 நாள் தயாரிப்பை நிறுத்தி வைக்க முடிவு

By செய்திப்பிரிவு

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் வைர நிறுவனங்கள் ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 28 வரையில் தயாரிப்பை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன. சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறையும், சில நிறுவனங்கள் வேலை நேரத்தை பாதியாகக் குறைக்கவும் முடிவு செய்துள்ளன.

வைரத்தை நறுக்குதல் மற்றும் பட்டைத் தீட்டுதலுக்கான முக்கிய தளமாக குஜராத்தின் சூரத் நகர் உள்ளது. இங்கு இத்துறையில் 8 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிற நிலையில், வைர ஏற்றுமதி மற்றும் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இத்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நெருக்கடியால் பல குறு, சிறு நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். வேலை இழப்பு, வருவாய் இழப்பு காரணமாக தற்கொலை நிகழ்வுகளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், தேக்க நிலையை எதிர்கொள்ளும் வகையில் தயாரிப்பை நிறுத்திவைக்க வைர நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 28 வரையில் தயாரிப்பை நிறுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE