தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இன்று (ஆக.9) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.51,400-க்கு விற்பனையாகிறது.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை நிர்மலா சீதாராமன் குறைத்ததில் இருந்தே தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.

இந்த வாரம் திங்கள், செவ்வாயில் தங்கம் விலை குறைந்த நிலை அதற்கு அடுத்தடுத்த நாட்களில் உயர்ந்து வருகிறது. இன்று (ஆக.9) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,425-க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.51,400-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரு.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலையானது இப்போது குறைவது, உயர்வதுமாக இருந்தாலும் கூட காலப்போக்கில் அதிகரிக்கவே செய்யும். குறிப்பாக அமெரிக்காவில் அந்நாட்டின் மத்திய வங்கி, தனது வட்டி விகிதத்தைக் குறைத்தால், தங்கம் விலை விறுவிறுவென ஏறிவிடும். அப்போது அது புதிய உச்சம் தொடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் வட்டி விகிதம் 0.5% வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அதனுடைய தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE