மதுரை: மதுரை ‘டைடல் பார்க்’ திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 5.63 ஏக்கர் நிலத்தில் ‘டைடல் பார்க்’ அமைவதாக கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் மண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 5.63 ஏக்கர் நிலத்தை ஒப்படைப்பதற்கான பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென்று, ‘டைடல் பார்க்’ பகுதியில் பார்க்கிங் உள்ளிட்ட மற்ற சில வசதிகளுக்காக கூடுதலாக 5 ஏக்கர் நிலம், இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டது. தற்போது மொத்தம் 10 ஏக்கரில் மதுரை ‘டைடல் பார்க்’ திட்டம் அமையவுள்ளது. திட்டம் அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே கீழ்தளத்தளத்துடன் 12 தளங்களுடன் இந்தக் கட்டிடம் அமைகிறது. இதற்கான உட்கட்டமைப்பு பணிகள், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், பிளம்பிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்கு தகுதியான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து இ-டெண்டர் விடப்பட்டுள்ளது. இ-டெண்டரில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை www.tntenders.gov.in என்ற இணையதளம் வழியாக வரும் செப்டம்பர் 7-ம் தேதி மதியம் 3 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என டைடல் பார்க் நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார்.
» தமிழக சாலை திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூ.5000 கோடி ஒதுக்கீடு: மாநிலங்களவையில் அமைச்சர் கட்கரி தகவல்
» அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா: சுவாமிமலையில் இருந்து புறப்பட்ட பக்தர்கள்
கலாச்சாரம், பண்பாட்டு தலைநகரான மதுரை, தொழில் துறையில் பின்தங்கியிருப்பதால் ‘டைடல் பார்க்’ திட்டம் ஒரு கனவு திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த ‘டைடல் பார்க்’ திட்டமிட்டப்படி அமைந்தால், தென் மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘டைடல் பார்க்’ திட்டத்தை தொடர்ந்து இதனை சார்ந்த மற்ற தொழில் வாய்ப்புகளும் வர வாய்ப்புள்ளதால் மதுரை தொழில் துறையிலும் பிற நகரங்களைப் போல பெரும் வளர்ச்சிபெற வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago