ரூ.2,000 நோட்டுகள் 98% திரும்பி உள்ளன: ரிசர்வ் வங்கி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றுஅறிவிக்கப்பட்டது. அப்போது புதிதாக ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன.

இதன்படி 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.92 சதவீதம் திரும்ப பெறப்பட்டு உள்ளன. ரூ.7,409 கோடி மதிப்பிலான2,000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் பொதுமக்களிடம் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE