சென்னை: சென்னையில் தங்கம் விலை ரூ.80 அதிகரித்து, பவுன் ரூ.51,440-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை,தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது.
அதன் பின்னர் ஜூலை 17-ம் தேதி ரூ.55,360 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் காலை பவுன் ரூ.54,480 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகலில் விறுவிறுவென குறைந்து ரூ.52,400-க்கு விற்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில், தற்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன்படி, இன்று பவுன் தங்கம் ரூ.80 அதிகரித்து, ரூ.51,440-க்கும், கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ரூ.6,430-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று கிராமுக்கு 70 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.91.70-க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.700 அதிகரித்து, ரூ.91,700-க்கும் விற்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago