புதிய உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 82,000, நிஃப்டி 25,000 புள்ளிகளை கடந்தது

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை (ஆக.1) வர்த்தகத்தை ஏற்றத்தில் தொடங்கின. சென்செக்ஸ் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 82,000 புள்ளிகளையும், நிஃப்டி முதல் முறையாக 25,000 புள்ளிகளையும் கடந்தன.

இன்று காலை 9.21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 334.83 புள்ளிகள் உயர்ந்து 82,076.17 ஆக இருந்தது. அதேபோல், நிஃப்டி 104.70 புள்ளிகள் உயர்ந்து 25,055.85 ஆக இருந்தது. அமெரிக்க மத்திய வங்கியின் குறிப்புகளால் உந்தப்பட்டு சர்வதேச சந்தைகளில் நிலவிய சாதமான சூழல் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கின.

நிஃப்டியைப் பொறுத்தவரை மாருதி சுசூகி, கோல் இந்தியா, ஹிண்டால்கோ, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல் மற்றும் பவர் கிரிடு பங்குகள் உச்சத்தில் இருந்தன. மறுபுறம், எம் அண்ட் எம், பிபிசிஎல், ஹீரோ மோடோக்ராப், சன் பார்மா மற்றும் எயிச்சர் மோட்டர் பங்குகள் சரிவில் இருந்தன.

செப்டம்பரில் வட்டிவிகித குறைப்புக்கு அமெரிக்க பெடரல் வங்கித் தலைவர் குறிப்பு கொடுத்திருப்பதால் சர்வதேச சந்தைகளில் நேர்மறைப் போக்கு நிலவுகிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் முதல் காலாண்டுக்கு முன்பாக, ஆட்டோ மொபைல்ஸ் துறையின் சுழற்சி ஈர்க்கக் கூடியதாகவும், நீடித்திருக்க கூடியதாவும் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE