புதுடெல்லி: அரசியல் நன்கொடைகளுக்கான வரிச் சலுகை 2022-23-ம் நிதி யாண்டில் ரூ.4,000 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஒன்பது ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் மட்டும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடைக்கு ரூ.3,967.54 கோடி அளவுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் நன்கொடைக்கான வரிச் சலுகை 2021-22-ல் ரூ.3,516.47 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் 2022-23 நிதியாண்டுக்கு வழங்கப்பட்ட அரசியல் நன்கொடைக்கான வரிச் சலுகை என்பது 13 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது, 2014-15-ல்ரூ.170.86 கோடியாக மட்டுமே இருந்தது.
ஆக, 2014-15 முதல் கடந்த ஒன்பது ஆண்டுகளில் அரசியல் நன்கொடைகள் மீது பெறப்பட்ட வரிச் சலுகைகளின் மொத்த வருவாய் பாதிப்பு ரூ.12,270.19 கோடியாக உள்ளது. 2023-24- ம்நிதியாண்டுக்கான தரவுகள் இன்னும் வெளியாகவில்லை.
» கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 120+ பேர் பரிதாப உயிரிழப்பு
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டம் 1961-ன்கீழ், இந்திய நிறுவனங்கள், தனிநபர்கள் நன்கொடைகள் தொடர்பான விலக்குகளைப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago