தமிழ்நாட்டில் ஐபேட் அசெம்ப்ளி தொடங்க ஃபாக்ஸ்கான் திட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதன்தமிழ்நாட்டு ஆலையில், ஐபேட்களையும் அசெம்ப்ளி செய்யஇருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுடன் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஃபாக்ஸ்கான் தைவானைச் சேர்ந்த நிறுவனம் ஆகும். ஆப்பிள்உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கான தயாரிப்புகளை ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து வழங்குகிறது.

இந்தியாவில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஆலை தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. இந்த ஆலையில், ஃபாக்ஸ்கான நிறுவனம் ஆப்பிள் ஐபோன்களை அசெம்பிள் செய்து வருகிறது. இந்நிலையில், இதே ஆலையில் ஐபேட்களையும் அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுமுக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. 2025-ம் ஆண்டு பிற்பாதி முதல் இந்தப் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பான்மையான போன்கள் சீனாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் சீனாவை முழுமையாக சார்ந்திருக்காமல், இந்தியா, வியட்நாம்என வெவ்வேறு நாடுகளில் தனக்கான விநியோக மையங்களை உருவாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதன் நீட்சியாகவே, ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ஆப்பிள் அசெம்ப்ளி ஆலையை தொடங்கியது. கூடவே, பெங்களூருவில் புதிதாக மிகப் பெரிய அளவில் தொழிற்சாலையை அமைத்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE