தங்கம் விலை 3-வது நாளாக வீழ்ச்சி: பவுனுக்கு ரூ.480 குறைந்து விற்பனை

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை எதிர்கொண்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,400 வரை குறைந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து தங்கத்தின் விலை இந்தியாவில் சரிந்து வருகிறது. அதன்படி இன்று (ஜூலை 25) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 ஆக குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6,430-க்கு விற்பனை ஆகிறது. இதனால் பவுனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.51,440-க்கு விற்பனை ஆகிறது.

முன்னதாக, நேற்றைய தினம் (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.60 மற்றும் செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 275 என தங்கம் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது. அண்மைய காலமாக தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வந்தது. அதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்கள் தங்கம் வாங்குவது இயலாத சூழல் இருந்தது. தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது. மேலும், தற்போது ஆடி மாதம் என்பதும், முகூர்த்த நாட்கள் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்