புதுடெல்லி: இந்திய ஐடி துறையில் அதிக ஊதியம் பெறும் தலைமைச் செயல் அதிகாரிகளின் (சிஇஓ) பட்டியலில் ஹெச்சிஎல் நிறுவ னத்தின் சிஇஓ விஜயகுமார் முதலி டம் பிடித்துள்ளார்.
ஹெச்சிஎல் நிறுவனம் சமீபத்தில் அதன் ஆண்டு அறிக்கையைவெளியிட்டது. அதில், சிஇஓ விஜயகுமாருக்கு ஆண்டுக்கு ரூ.84.16 கோடி ஊதியமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவரது ஊதியம் 190.75 சதவீதம் அதிகம் ஆகும்.
பங்கு, சலுகைகள்: அவரது அடிப்படை ஊதியம் ரூ.16.39 கோடி, போனஸ் ரூ.9.53 கோடி, ஊக்கத் தொகை ரூ.19.74 கோடி என்று கூறப்படுகிறது. நிபந்தனை அடிப்படையிலான பங்குகள், சலுகைகள் உள்ளிட்டவை சேர்த்து அவர் ஆண்டுக்கு ரூ.84.16 கோடி ஊதியம் பெறுகிறார்.
அவரது ஊதியம் ஹெச்சிஎல் நிறுவன ஊழியர்களின் சராசரி ஊதியத்தைவிட 707.46 சதவீதம்அதிகம் ஆகும். விஜயகுமார் கோவையில் உள்ள பிஎஸ்ஜிகல்லூரியில் மின் மற்றும் மின்னணு துறையில் பட்டம் பெற்றவர். ஹெச்சிஎல் நிறுவனத்தில் 30 ஆண்டுகளாக உள்ளார். 1994-ம் ஆண்டுபணிக்குச் சேர்ந்தவர், அந்நிறுவனத்தில் வெவ்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வருகிறார்.
» மரபணு மாற்றப்பட்ட கடுகு பரிசோதனைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
» நீட் வழக்கு: வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூத்த வழக்கறிஞரை எச்சரித்த தலைமை நீதிபதி சந்திரசூட்
இன்போசிஸ், விப்ரோ: இவரைத் தொடர்ந்து அதிக ஊதியம் பெறும் இந்திய ஐடி துறை சிஇஓ-க்கள் பட்டியலில் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓசலில் பரேக் உள்ளார். அவரது ஆண்டு வருமானம் ரூ.66.25 கோடி ஆகும். மூன்றாம் இடத்தில், ரூ.50 கோடி ஆண்டு வருவாயைக் கொண்டு விப்ரோ நிறுவனத்தின் புதிய சிஇஓ ஸ்ரீனி பாலியா உள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago