ரயில்வே பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ரூ.9,151 கோடி நிதி ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

அமராவதி: பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து நேற்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

நடப்பு நிதி ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ரூ.9,151 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆந்திராவில் தற்போது ரூ.73,473 கோடியில் ரயில்வே பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்ருத் திட்டத்தின் கீழ் ஆந்திராவில் 73 புதிய ரயில்வே நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தெலங்கானாவிலும் ரூ.32,946 கோடியில் ரயில்வே திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்ருத்திட்டத்தின் கீழ் தெலங்கானாவிலும் 40 ரயில்வே நிலைய பணிகள் முழுமையாக செய்யப்பட் டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE