வருமான வரி விதிப்பு விகிதத்தில் மாற்றம்: 2024-25 மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவையில் மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், புதிய முறை வருமான வரி விதிப்பு விகிதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விகிதத்தில் நிரந்தர கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் 2024 25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது: வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு. குறு. குறு, சிறு நிறுவனங்கள். நடுத்தர மக்களின் மேம்பாட்டை முன்னிறுத்தி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் வேளாண் உற்பத்தி பெருக்கம். வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு. மனிதவள மேம்பாடு, சமூக நீதி, உற்பத்தி சேவைகள், நகர்ப் புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆராய்ச்சி-அடுத்த தலைமுறைக் சீர்திருத்தங்கள் ஆகிய 9 துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சாகுபடி செய்ய, அதிக விளைச்சல் தரக்கூடிய மற்றும் அனைத்து பருவநிலைகளையும் தாக்குப்பிடித்து வளரக்கூடிய 109 புதிய பயிர் ரகங்கள், தோட்டக்கலை பயிர்கள் அறிமுகம் செய்யப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற ஊக்கம் அளிக்கப்படும். வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காகரூ.2 லட்சம் கோடி செலவில் 5 திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன்மூலம் 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். நாடு முழுவதும் 1,000 தொழில் பயிற்சி மையங்கள் மேம்படுத்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 500 புதிய வருமான வரி விகிதம் நடைமுறையில் இருப்பது பெரிய நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகையுடன் ஓராண்டு காலம் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். ஒருமுறை நிதியுதவியாக ரூ.6,000 வழங்கப்படும். இதன்மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

உள்நாட்டில் உயர்கல்வி பயில மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும். முத்ரா தொழில் கடன் ரூ.10 லட்சத் தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். விசாகப் பட்டினம்- சென்னை தொழில் வழித்தட திட்டத்தை செயல்படுத்த நிதியுதவி வழங்கப்படும். தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 12 தொழில் பூங்காக்கள் உருவாக்க அனுமதி அளிக்கப்படும்.

பெண்கள், சிறுமிகள் நலனுக்கான திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு வசதிகள் உட்பட கிராமப்புற வளர்ச்சி திட்டங்க ளுக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வீட்டு வசதி திட்டத் தின்கீழ் 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி நகர்ப்புற ஏழைகள், நடுத்தர குடும்பங்களின் வீட்டு வசதி தேவை பூர்த்தி செய்யப்படும். புற்றுநோய் சிகிச்சைக்கான 3 மருத்துகளுக்கு முழுமையான வரிவிலக்கு வழங்கப்படும். செல்போன், சார்ஜர், செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதம் குறைக்கப்படும். இதன்மூலம் செல்போன் விலை குறையும்.

தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான சுங்க வரி 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும். இதனால் தங்கம், வெள்ளி விலை குறையும். புத்தொழில் நிறுவனங்கள், முதலீடுகளை ஊக்குவிக்க அனைத்து தரப்பு முதலீட்டாளர்கள் மீதான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுகிறது. அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான பெருநிறுவன வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

நில சீர்திருத்த நடவடிக்கை: அடுத்த 3 ஆண்டுகளில் கிராமங்கள், நகரங்களில் நிலம் தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் படும். இதன்படி, அனைத்து நிலங்களுக்கும் தனித்துவ எண் வழங கப்படும். நில வரைபடங்கள் டிஜிட்டல்மயம் ஆக்கப்படும். நகர்ப் புறங்களில் புவியியல் தகவல் அமைப்பின் வரைபடத்துடன் நில ஆவணங்கள் டிஜிட்டல்மயம் ஆக்கப்படும். இதன்மூலம், அட மான கடன் பெறுதல், விவசாய நிலம் சார்ந்த சேவைகள் எளிதாகும்.

தனிநபர் வருமான வரி விதிப்பு நடைமுறை எளிதாக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே புதிய வருமான வரி விகிதம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போதைய நிலையில் வருமான வரி செலுத் துவோரில் 3-ல் 2 பங்குக்கும் அதிகமானோர் புதிய வரி விகித முறைக்கு மாறியுள்ளனர்.

பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி புதிய விகிதத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதன்படி ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை 5% வரி. ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10% வரி. ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 1.5% வரி, ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20% வரி. ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய வரி விகிதத்தில் நிரந்தர கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. இதே போல, குடும்ப ஓய்வூதியத்தில் கழிவு தொகை ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக அதிகரிக்கப் படுகிறது. இந்த மாற்றங்கள் மூலமாக, மாத ஊதியம் பெறுவோர் ரூ.17,500 வரை சேமிக்க முடியும். இதனால், 4 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் அடைவார்கள்.

இவ்வாறு பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சுங்க வரி குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், தங்கம், வெள்ளி விலை நேற்றே கணிசமாக குறைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்