மத்திய பட்ஜெட் 2024: சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க முத்ரா கடன் ரூ.20 லட்சமாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் வரம்பு இரு மடங்காக உயர்த்தப்படும் என்று நேற்றைய பட்ஜெட் அறிவிப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், முத்ராதிட்டத்துக்கான கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

சிறு, குறு தொழில்களுக்கு பிணை இல்லாமல் கடன் உதவிவழங்குவதற்காக மத்திய அரசு,கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல்மாதம் முத்ரா யோஜனா திட்டத்தைக் கொண்டுவந்தது.

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் கடன்வழங்கப்படுகிறது. சிஷு பிரிவின்கீழ் ரூ.50,000 வரையிலும், கிஷோர்பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் பிரிவின் கீழ்ரூ.10 லட்சம் வரையிலும் கடனாகவழங்கப்படுகிறது. வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கி வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர தொழிலில் ஈடுபடுபவர்கள் எந்தவித அடமானமும் இல்லாமல் கடன் பெற முடியும்.

இதுவரையில் முத்ரா திட்டத்துக்கான கடன் வரம்பு தருண்பிரிவின் கீழ் ரூ.10 லட்சமாகஇருந்தது. இந்நிலையில், தற்போது ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே முத்ராதிட்டத்தின் கீழ் கடன் வாங்கிஅதை முறையாக திருப்பிசெலுத்தியவர்களுக்கு இந்தஅறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கடன் உத்தரவாத திட்டம்: சிறு, குறு நிறுவனங்கள் எந்தப் பிணையும் வழங்காமல் தங்களுக்குத் தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்குவதற்கு புதிய கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப் படும்.

மேலும் நிறுவனங்களின் கடன் அபாயங்களை குறைக்கும் வகையிலும், அதன் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும் உருவாக்கப்படும் சுயநிதி உத்தரவாத நிதியம் மூலம், ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ரூ.100 கோடி வரை கவரேஜ் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE