சென்னை: டீசலை ஒப்பிடும்போது சிஎன்ஜி பேருந்துகளில் 13 சதவீதம் இயக்கச் செலவு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு), எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக தற்போது மதுரை, சேலம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 வீதம் 6 சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் சுமார் 50 நாட்களுக்கு மேலாக இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் டீசலுக்காக செலவிடப்படும் தொகை குறைந்திருக்கிறது. மேலும், மைலேஜும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக மதுரை போக்குவரத்துக் கழகத்தில் 2,697 கிமீ பயணிக்க 519 லிட்டர் டீசல் செலவாகும். ஆனால், 437 லிட்டர் சிஎன்ஜி போதுமானதாக இருந்தது. ஒரு லிட்டர் டீசலில் 5.2 கிமீ பேருந்துகள் பயணிக்கும் நிலையில், தற்போது சிஎன்ஜி மூலம் 6.17 கிமீ பயணித்துள்ளது. இதன் மூலம் டீசலுக்கு செலவிடும் தொகை ரூ.47,361, சிஎன்ஜியில் ரூ.34,755 என்ற அளவில் குறைந்துள்ளது. அதன்படி, கிமீ-க்கு ரூ.4.67 மிச்சமாகியுள்ளது. இவ்வாறு 13 சதவீதம் இயக்கச் செலவு குறைகிறது.
» புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் உள்ளிட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
» நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை நாளை வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்
குறிப்பாக டீசல் பேருந்துகளை சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் மாற்றம் செய்த தொகையை ஒரு மாதத்தில் மீட்டெடுக்க முடிந்தது. மேலும், இரவை ஒப்பிடும்போது பகல் நேரத்தில் சிறப்பாகவே சிஎன்ஜி பேருந்துகள் இயங்குகின்றன.
அண்மையில் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் சிஎன்ஜி பேருந்து தீப்பிடித்தது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம் போக்குவரத்து கழகங்களிலும் சோதனை அடிப்படையில் சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago