புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் ரூ.5.74 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 19.5 சதவீதம் அதிகம் ஆகும்.
நடப்பு நிதி ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை11-ம் தேதி வரையில் வசூலாகியுள்ள நேரடி வரி குறித்த விவரங்களை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் ரூ.5.74 லட்சம்கோடி நிகர நேரடி வரி வசூலாகியுள்ளது. இதில், தனிநபர் வருமான வரி வசூல் ரூ.3.64 லட்சம் கோடியாகவும், கார்ப்பரேட் வரி வசூல் ரூ.2.1 லட்சம் கோடியாகவும் உள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமான வரி வசூல் 24 சதவீதமும், கார்ப்பரேட் வரி வசூல் 12.5 சதவீதமும் உயர்ந்துள்ளது.
அதேபோல் வரி ரீபண்ட் ரூ.70,902 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 64.5 சதவீதம் அதிகம் ஆகும். சில வாரங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம்கோடி டிவிடெண்ட் வழங்கியது. தற்போது வரி வசூலும் அதிகரித்து இருப்பதால், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
10 days ago
வணிகம்
10 days ago