கட்டிட வடிவமைப்பாளருக்கான ‘அய்டா’ விருது: மலேசியா, இந்தோனேசியாவை சேர்ந்த 2 மாணவிகள் தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: ஜப்பானைச் சேர்ந்த நிப்பான் பெயிண்ட் நிறுவனம், ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளம் கட்டிட வடிவமைப்பு மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்கும்விக்கும் வகையில் 2008-ம் ஆண்டு முதல் ஓவ்வொரு ஆண்டும் ‘அய்டா’ விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறந்த கட்டிடக்கலை வடிவமைப்புக்கான விருது மலேசியாவைச் சேர்ந்த மாணவி லிம்ஜெங் இங்குக்கும் சிறந்த உள்அரங்கு வடிவமைப்புக்கான விருது அலிபியா அஸ்ஸாராஹுக்கும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு, அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வடிமைப்பு சார்ந்து படிப்பதற்கான 10 ஆயிரம் டாலர் நிதிநல்கை பரிசாக வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE