மும்பை: உலகின் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலை மெர்சர் நிதி ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியல் சம்பந்தப்பட்ட நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை செலவினம் அடிப்படையில் வெளியாகி உள்ளது.
பணவீக்கம், சர்வதேச பொருளாதார சூழல், உள்நாட்டு வரி, போக்குவரத்து, பொருட்களின் விலை போன்றவை செலவு கூடுவதற்கு முக்கிய காரணிகளாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் சுமார் 226 நகரங்களை இதில் மெர்சர் பட்டியலிட்டுள்ளது.
அந்த வகையில் இந்த பட்டியலில் ஹாங்காங், சிங்கப்பூர், சூரிச், ஜெனிவா, பாஸல், பெர்ன், நியூயார்க், லண்டன், நாசாவ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. இந்த நகரங்கள் உலகின் செலவு மிகுந்த டாப் 10 நகரங்கள். அதே போல ஹவானா, விண்ட்ஹோக், டர்பன், துஷான்பே, பிளாண்டயர், கராச்சி (பாகிஸ்தான்), பிஷ்கெக், இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்), லாகோஸ் மற்றும் அபுஜா ஆகிய நகரங்கள் செலவு குறைந்த நகரங்களாக உள்ளன. ஆசிய அளவில் செலவு மிகுந்த நகரங்களாக ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் சியோல் உள்ளனர். இந்தப் பட்டியலில் 22, 25 மற்றும் 32-வது இடங்களில் இந்த நகரங்கள் உள்ளன.
இந்தியா: வழக்கம் போலவே இந்தப் பட்டியலில் செலவினம் அதிகம் உள்ள நகரமாக மும்பை முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் 136-வது இடத்தில் மும்பை மாநகரம் உள்ளது. இது தவிர டெல்லி (165), சென்னை (189), பெங்களூரு (195), ஹைதராபாத் (202), புனே (205), கொல்கத்தா (207) ஆகிய இடங்களில் உள்ளன.
» “கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும்” - அன்புமணி
» வேண்டும் வரம் அருளும் திருஆலவாயநல்லூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்
இதில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மும்பை 11 இடங்களும், டெல்லி 4 இடங்களும், புனே 8 இடங்களும், கொல்கத்தா 4 இடங்களும் முன்வந்துள்ளன. சென்னை 5 இடங்களும், பெங்களூரு 6 இடங்களும் முந்தைய ஆண்டுடன் செலவினத்தில் பின்தங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago