வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: சென்னையில் ரூ.1,809-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில், நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை இன்றைக்கே அமலுக்கு வந்தது.

புதிய விலையின்படி, புதுடெல்லியில் வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.1,646 -க்கும், மும்பையில் ரூ.1,598-க்கும், சென்னையில் ரூ.1,809-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,756-க்கும் விற்கப்படுகிறது.

தொடர்ந்து நான்காவது மாதமாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

13 mins ago

வணிகம்

38 mins ago

உலகம்

29 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்