மும்பை: பங்குச் சந்தை நேற்று புதிய உச்சத்தைத் தொட்டது. சென்செக்ஸ் 568.93 புள்ளிகள் உயர்ந்து 79,243 ஆகவும், நிஃப்டி 175.7 புள்ளிகள் உயர்ந்து 24,044 ஆகவும் ஏற்றம் கண்டன. சதவீத அளவில் சென்செக்ஸ் 0.72%, நிஃப்டி 0.74% உயர்ந்தன.
சென்செக்ஸ் 79 ஆயிரத்தையும், நிஃப்டி 24 ஆயிரத்தையும் தாண்டுவது இதுவே முதன்முறை.
அதிகபட்சமாக, அல்ட்ராடெக் சிமெண்ட் 5.15%, எல்டி மைண்ட் ட்ரீ 3.85%, கிராசிம் 3.34%, என்டிபிசி3.31%, விப்ரோ 3.15%, டாக்டர் ரெட்டி லேப்ஸ் 2.73%, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 2.61%, பிபிசிஎல் 2.16%, டாடா மோட்டார்ஸ் 2.13%, இன்போசிஸ் 2.12%, டிசிஎஸ் 2.03% என்ற அளவில் ஏற்றம் கண்டன.
அதேசமயம், ஸ்ரீராம் பைனான்ஸ் 1.27%, எல் அண்ட் டி 1.07% இறக்கம் கண்டன.
» ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பன்னாட்டு விமான நிலையம்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையில் பாஜக கூட்டணி 3-வது முறையாக கடந்த ஜூன் 9-ம் தேதி ஆட்சி அமைத்தது. அது முதலேயே பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டு வருகிறது. ஜூன் 10-ம் தேதி சென்செக்ஸ் 76,490 ஆக இருந்தது. இந்நிலையில், இரண்டு வாரங்களில் 3,000 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
36 mins ago
வணிகம்
5 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago