அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் முதல் 10 சிஇஓ பட்டியலில் இந்தியரான நிகேஷுக்கு இடம்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் டாப் 10 சிஇஓ பட்டியலை சி சூட் கம்ப் நிறுவனம் வெளியிட் டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளி நிகேஷ் அரோரா இடம் பிடித்துள்ளார். நிகேஷ் அரோரா பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் சிஇஓவாகவும் தலைவராகவும் உள்ளார். 2023-ம்ஆண்டு 266 மில்லியன் டாலர் (ரூ.2,200 கோடி) ஊதியம் பெற்று இந்தப் பட்டியலில் 10-வது இடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில், 1.4 பில்லியன் டாலர் (ரூ.11,600 கோடி) ஊதியம் பெற்று எலான் மஸ்க் முதல் இடத்தில் உள்ளார். பலந்திர்டெக்னாலஜிஸ் சிஇஓ அலெக்சாண்டர் கார்ப் 1.1 பில்லியன் டாலர் (ரூ.9,130 கோடி) ஊதியம் பெற்று 2-வது இடத்திலும், ப்ராட்காம் சிஇஓ ஹாக் டான் 767 மில்லியன் டாலர் (ரூ.6,350 கோடி) வருமானம் பெற்று 3-வது இடத்திலும் உள்ளனர்.

சுந்தர் பிச்சை இல்லை: இந்திய வம்சாவளியினர் களான கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

நிகேஷ் அரோரா டெல்லியில் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மின்னணு பொறியியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகுஅமெரிக்காவில் மேற்படிப்பு முடித்த அவர், கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். பின்னர், சாஃப்ட் பேங்க் நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2018-ம் ஆண்டு பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸின் சிஇஓ-வாக பொறுப்பேற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 secs ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

23 mins ago

ஜோதிடம்

20 mins ago

ஓடிடி களம்

15 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

34 mins ago

ஜோதிடம்

42 mins ago

தமிழகம்

49 mins ago

விளையாட்டு

40 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

46 mins ago

மேலும்