ஜூன் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 5.1%: மூடி’ஸ் - 7 சதவீத வளர்ச்சி சாத்தியம்

By செய்திப்பிரிவு

சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ் இந்தியாவின் ஜூன் காலாண்டு வளர்ச்சி 5.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இதே காலாண்டில் 4.7 சதவீத வளர்ச்சியை விட சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஜூன் காலாண்டில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. குறிப்பாக மூலதன செலவுகள் என்று மூடி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டின் வளர்ச்சி 4.7 சதவீதமாகும். அதேபோல, கடந்த நிதி ஆண்டின் (2013-14) வளர்ச்சியும் 4.7 சதவீதம்தான்.

ஜூன் காலாண்டுக்கான முறையான அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது. இப்போது இந்தியா வளர்ச்சியின் ஆரம்பகட்ட பாதையில் இருக்கிறது. 2016ம் ஆண்டு நல்ல வளர்ச்சி இருக்கும் என்றும், நரேந்திர மோடி சாதகமான சூழ்நிலையில் பொறுப்பேற்றிருக்கிறார் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சீர்திருத்தங்கள் தொடரும் பட்சத்தில் 7 சதவீத வளர்ச்சியை இந்தியாவால் அடைய முடியும் என்று இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அரசாங்கத்தின் உதவி இல்லாமலே 2014ம் ஆண்டு ஐந்து சதவீத வளர்ச்சியும், 2016ம் ஆண்டு 6 சதவீத வளர்ச்சியும் இந்தியாவால் அடைய முடியும். மோடியின் திட்டங்கள் மட்டுமல்லாது, அதை செயல்படுத்தும் விதத்தில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது.

தொழில் உற்பத்தி பலமடைந்து வருகிறது. இது இந்திய ஜிடிபியில் எதிரொலிக்கும் என்றார். தேர்தலுக்கு பிறகு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்ற வாரத்தில் மற்ற சர்வதேச தர ஆய்வு நிறுவனங்களான டாய்ஷ் வங்கி, பார்கிலேஸ், நொமுரா உள்ளிட்டவை ஜூன் மாத ஜிடிபி வளர்ச்சி கணிப்பை வெளியிட்டன. இந்த நிறுவனங்கள் 5.6 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்