சென்னை நகருக்கான சரக்கு போக்குவரத்து திட்டம் தயாரிக்க ‘கும்டா’ கண்காணிப்பில் ஒருங்கிணைப்பு குழு

By கி.கணேஷ்

சென்னை: சென்னை நகருக்கான சரக்கு போக்குவரத்து திட்டத்தை உருவாக்க, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA) சிறப்பு அதிகாரி தலைமையில் 22 அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளதுடன், 6 மாதங்களில் திட்டத்தை உருவாக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொழில்துறை செயலர் அருண்ராய் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் ஏற்பட்டு வரும் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சரியான சரக்கு போக்குவரத்து திட்டத்தை உருவாக்க தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி, சரக்கு போக்குவரத்து பிரிவுக்கான ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பொறுப்புத் துறையாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் (டிட்கோ) நியமிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வர்த்தகம் மற்றம் தொழில்துறையானது, இரண்டு முக்கிய நகரங்களில் நகர சேரக்கு போக்குவரத்து கூட்டுக்குழுவை உருவாக்க பரிந்துரைத்தது. அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு பிப்.24ம் தேதி தலைமைச்செயலர் தலைமையில், மாநில சரக்கு போக்குரவரத்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், சென்னைக்கு நகர சரக்கு போக்குவரத்து திட்டத்தை உருவாக்கவும், இதற்காக நகர சரக்கு போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இக்குழுவை உருவாக்குவதற்கு, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (சியுஎம்டிஏ) சிறப்பு அதிகாரி விரிவான பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பினார். அதில், குழுவின் உறுப்பினர்கள், அவர்களின் பொறுப்புகள் குறித்தும் தெரிவித்திருந்தார். இவற்றை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, சென்னை நர சரக்கு போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவை, சியுஎம்டிஏவின் கண்காணிப்பின் கீழ் உருவாக்க அனுமதியளித்துள்ளது.

அதன்படி, குழுவின் தலைவராக சியுஎம்டிஏவின் தலைவரும், உறுப்பினர்களாக சென்னை மாநகராட்சி ஆணையர், டிட்கோ மேலாண் இயக்குனர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர், தாம்பரம் மாநகராட்சி ஆணையர், சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர், தாம்பரம் காவல் இணை ஆணையர், ஆவடி காவல் இணை ஆணையர், சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையர், சென்னை தெற்கு போக்குவரத்து இணை ஆணையர், சென்னை துறைமுக பொறுப்புக்கழக துணை தலைவர்;

எண்ணூர் காமராஜர் துறைமுக மேலாண் இயக்குனர், சென்னை விமான நிலைய இயக்குனர், தெற்கு ரயில்வே தலைமை சரக்கு போக்குவரத்து மேலாளர், சுங்கத்துறை கூடுதல் அல்லது இணை ஆணையர், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர், சென்னையில் உள்ள இந்திய கண்டெய்னர் கார்ப்பரேசன் தலைமை பொது மேலாளர், மத்திய சேமிப்புக்கிடங்கு கழக மண்டல மேலாளர் ஆகியோரும், ஒருங்கிணைப்பாளராக சியுஎம்டிஏ தலைமை திட்ட அமைப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதவிர, தனியார், வல்லுநர்கள் ஆகியோர் பல்வேறு தொழில் பிரிவிலிருந்தும் நடைபெறும் குழு கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவர்.

குழுவின் பணிகள்: தற்பேதைய சரக்கு போக்குவரத்து செயல்பாடுகள் அடிப்படையில், எதிர்காலத்தேவைகள், முன்னுரிமைகளை கருத்தில் கொண்டு நீண்ட கால செயல்திட்டமாக, சென்னை பெருநகர பகுதிக்கான நகர சரக்கு போக்குவரத்து திட்டத்தை உருவாக்குதல் முக்கிய பணியாகும்.

சரக்கு போக்குவரத்து செயல்பாட்டை மேம்படுத்த, புதிய செயல்திட்டங்களை அங்கீகரித்தல், பல்வேறு பங்குதாரர்களின் செயல்திட்டங்களை ஆய்வு செய்து பரிந்துரைத்தல், நகரின் சரக்கு போக்குவரத்து திறனை உறுதி செய்தல், நகர சரக்கு போக்குவரத்து திட்டத்தை கண்காணித்தல், பசுமை சரக்கு போக்குவரத்து திட்டத்துக்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தல் உள்ளிடட பணிகளை இக்குழு மேற்கெள்ளும். மேலும், 6 மாதங்களுக்குள் நகர சரக்கு போக்குவரத்து திட்டத்தை இக்குழு உருவாக்க வேண்டும்,” என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்