300+ ஸ்டால்கள் உடன் சென்னையில் ஜூன் 14 முதல் 17 வரை சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஜூன் 14 முதல் 17 வரை சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தால் நடத்தப்படும் இக்கண்காட்சியில் இடம்பெறவுள்ள 300-க்கும் மேற்பட்ட ஸ்டால்களை 40,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிடவுள்ளனர்.

தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சியை (IPLAS) 2024 ஜூன் 14 முதல் 17 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடத்துகிறது. 2005-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்தக் கண்காட்சி, ஆறாவது முறையாக நடைபெறுகிறது.

இந்தப் பதிப்பின் சிறப்பம்சமாக 17,500 சதுரமீட்டர் பரப்பளவில் இந்தியா முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட காட்சியாளர்கள், சீனாவைச் சேர்ந்த சில நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்நிகழ்வில் 90-க்கும் மேற்பட்ட நேரடி விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பரந்த இந்தக் கண்காட்சியில் இயந்திரங்கள், பொருட்கள், அச்சுகள், வார்ப்புகள், அச்சிடுதல் மாற்றும் இயந்திரங்கள் மற்றும் துணைப்பொருட்களை காட்சிப்படுத்தக்படவுள்ளன.

பிளாஸ்டிக் தொழிலை விரிவாக்கம் செய்யவும் அல்லது புதிதாகத் தொடங்வும் இந்தக் கண்காட்சி உதவும். புதிய திட்ட யோசனைகளை பார்வையாளர்கள் பெறுவார்கள், அத்துடன் பிளாஸ்டிக் சார்ந்த அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் காண முடியும்.

இந்த சர்வதேச நிகழ்வை 40,000-க்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்வையிட்டு பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்டை மாநிலங்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும், இலங்கை, வியட்நாம், மலேசியா, மியான்மர், கென்யா ஆகிய நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வரவுள்ளனர்.

முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்தப் பதிப்பும் வரும் ஆண்டுகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பதோடு, இத்துறையின் வளர்ச்சியையும் எளிதாக்கும். இந்தக் கண்காட்சியில் புதிய இயந்திரங்கள் ரூ. 1,000 கோடி வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிளாஸ்டிக் துறையில் பெரிய தாக்கத்தையும், புதிய வேலை வாய்பையும் உருவாக்கும்.

பிளாஸ்டிக், அதன் பங்களிப்பு மற்றும் பயன்பாட்டிற்குப் பிறகு அதை அகற்றும் வழிகள் பற்றிய புதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பிளாஸ்டிக் உலகத்தின் தீம் பெவிலியனனான டபிள்யூ.ஓ.பி.எஸ். (WOPS)-க்கு டாப்மா (TAPMA) ஏற்பாடு செய்திருக்கிறது. உற்பத்தியாகும் இடத்திலேயே பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்து மறுசுழற்சி செய்வதை இந்தத் தீம் பெவிலியன் ஊக்குவிக்கும்.

பள்ளிக் குழந்தைகளுக்கான தொடர்புகொள்ளக்கூடிய விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோக்கள் மற்றும் விளையாட்டுகள் இங்கு இடம்பெற்றுள்ளது. நுகர்வுக்குப் பின் உருவான நகராட்சிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட, நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடிய அறைகலன்கள் காட்சிக்கு வைக்கப்படும்.

பள்ளி / கல்லூரி மாணவர்கள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் பங்கேற்பதற்கு டாப்மா அழைப்பு விடுத்திருக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த நான்கு நாள் கண்காட்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்