தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ,53,200-க்கு விற்பனையானது. இதன் மூலம், தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி மிக அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ.43,040 ஆக அதிகரித்தது. பின்னர், மீண்டும் கடந்த ஆண்டு படிப்படியாக உயர்ந்து டிசம்பர் மாதம் ரூ.47 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர் தங்கம் விலை குறைந்து ரூ.46 ஆயிரத்துக்குள் விற்பனை ஆனது.

பின்னர், மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ம் தேதி ஒரு பவுன் ரூ.52 ஆயிரமாகவும், 9-ம் தேதி ரூ.53 ஆயிரமாகவும், 19-ம் தேதி ரூ.55,120-க்கும் அதிகரித்து வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.54,720-க்கு விற்பனையானது. தங்கம் விலை மீண்டும் ஏற தொடங்கியதைக் கண்டு நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது.

இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.190 குறைந்து ரூ.6,650-க்கும், பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.53,200-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.56,960-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்கள் தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக குறைந்துள்ளது நகை வாங்குபவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.96-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.96.000 ஆக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்