சில்லறை பணவீக்க விகிதம் 7.96

நாட்டின் சில்லறை பணவீக்க விகிதம் ஜூலை மாதத்தில் 7.96 சதவீதமாக உயர்ந்துள்ளது. காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் விலை உயர்வே இதற்குக் காரணமாகும்.

நுகர்வோர் விலை குறியீட் டெண் அடிப்படையில் சில்லறை பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. ஜூன் மாதம் இது 7.46 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் பணவீக்க விகிதம் 9.64 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 9.36 சதவீதமாக உயர்ந்தது. இது ஜூன் மாதத்தில் 7.97 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதத்தில் காய் கறிகளின் விலை 16.88 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது. பழங்களின் விலை 22.48 சதவீதம் உயர்ந்திருந்தது. பருப்பு வகைகள் 5.85 சதவீதம் உயர்ந்திருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

மேலும்