சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.54 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.
பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதன் பின்னர் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 20-ம் தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. அன்றைய தினம் வெள்ளி விலையுமே ரூ.100-ஐ கடந்து, ரூ.101 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது.
இதைத் தொடர்ந்து 2 நாட்களும் பவுன் தங்கம் ரூ.54,880 என்ற விலையில் மாற்றமில்லாத நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.880 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.54,000 என்ற விலையில் விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,750-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.57,760-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.3.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.97 ஆகவும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.97,000-ஆகவும் உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago