ஏற்றுமதி - இறக்குமதியை மேம்படுத்த 7 நாடுகளுடன் இந்தியா பரஸ்பர ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஏற்றுமதி மற்றும் இறக்குமதிசெயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் 7 நாடுகளுடன் இந்தியாபரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுடனான ஏற்றுமதி - இறக்குமதி செயல்பாட்டை மேம்படுத்த இந்தியா பல்வேறுமுன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், சட்டவிதிகளுக்கு உட்பட்ட வர்த்தகத்தை உறுதி செய்யவும், ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு ஏதுவான கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் பல நாடுகளுடன் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

இம்மாதத்தில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கும் (சிபிஐசி) ரஷ்ய பெடரல்சுங்க சேவைக்கும் இடையேஅங்கீகரிக்கப்பட்ட பொருளாதாரஆபரேட்டர் (ஏஇஓ) தொடர்பாகபரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து சிபிஐசி தலைவர்சஞ்சய் குமார் அகர்வால் கூறுகையில், “சிபிஐசி மற்றும் ரஷ்யாவின் பெடரல் சுங்க சேவையுடன் ஏஇஓ பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு உதவியாக அமையும். இது இந்தியா மேற்கொள்ளும் 7-வது பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் ஆகும். ஏற்கெனவேதென் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காக் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE