புதுடெல்லி: கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவில் ரஷ்யாவிடமிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத் தில் உயர்ந்துள்ளது.
ஏப்ரலில் இந்தியா ரஷ்யாவிட மிருந்து நாளொன்றுக்கு 18 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. மார்ச் மாதத்துடன் ஒப்பிட இது 8.2 சதவீதம் அதிகம்.
ரஷ்யாவின் சோவ்காம்ஃப் ளோட் கப்பல் நிறுவனம் மீதுகடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காபொருளாதாரத் தடை விதித்தது. இதனால், அந்த நிறுவனத்தின் கப்பல் ஏற்றி வந்த கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்ய முடியாமல் போனது. தற்போது, அக்கப்பல் மீண்டும் விநியோகத்தைத் தொடங்கியுள்ளது. இதனால், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அதிகரித்தது.
இந்தியா கடந்த ஏப்ரலில் மொத்தமாக நாளொன்றுக்கு 48 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இதில் ரஷ்யாவின் பங்கு மட்டும் 38 சதவீதம் ஆகும்.
» கேரளாவில் உடல் உறுப்புக்காக ஆள்கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் கைது
» புரி ஜெகந்நாதர் குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து 3 நாட்கள் விரதம்: சாம்பித் பத்ரா அறிவிப்பு
2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதைக் கண்டிக்கும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைவிதித்தது. இதையடுத்து நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா, தங்கள் கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது.
இதை வாய்ப்பாக பயன்படுத்தி, ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago