சென்னை: சென்னையில் இன்று (மே.18) ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு தங்கம் விலை கடுமையாக குறைந்தது. ஆனால் கடந்த அக்டோபரில் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் தொடங்கிய பின்னர் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. பவுன் ரூ.50,000 எனத் தொடங்கி பல புதிய உச்சங்களைத் தொட்டது. கடந்த ஏப்.19-ம் தேதி ரூ.55,120 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின்னர் ரூ.55,000ஐ ஒட்டி ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று (மே.18) ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து 6,850-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.96.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டுவருவது நடுத்தர வர்க்க மக்களை பெரிதும் பாதித்துள்ளனது.
முக்கிய செய்திகள்
வணிகம்
8 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago