தடைக்காலம் ஒரு மாதத்தை கடந்த நிலையில் மீன்கள் விலை உயர்வு

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலத்தைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர் கள் கடலுக்குச் செல்லாததால் தமிழகத்தில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் கிழக்கு கடற்கரைக் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 அன்று தொடங்கியது. ஜூன் 14 வரை 61 நாட்கள் தமிழகத்தில் இந்தத் தடை அமலில் இருக்கும். இதனால், தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் கடந்த ஒரு மாதமாக கடலோரம் நங்கூரமிடப்பட்டுள்ளன. மேலும் மீனவர்கள் விசைப் படகுகளில் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டுப் படகு மீனவர்கள் சிறிய படகுகள் மூலம் வழக்கம் போல மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், இவை போதுமானதாக இல்லை. இதனால் தமிழகத்தின் பிரதான மீன் சந்தைகளில் மீன் களின் விலை வேகமாக உயர்ந் துள்ளது.

இது குறித்து ராமேசுவரம் நாட்டுப் படகு மீனவர்கள் கூறியதாவது: ராமநாதபுர மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள், கரை வலை மீனவர்கள் மட்டுமே மீன்களைப் பிடிக்கின்றனர். இவற்றை கடற்கரைப் பகுதியிலேயே வியாபாரிகள் போட்டி போட்டு அதிக விலை கொடுத்து வாங்கி வெளி மாநிலங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் அனுப்புகின்றனர்.

கிலோ ரூ.100-க்கு விற்ற மத்தி, சூடை மீன்கள் தற்போது 150 முதல் ரூ.200 வரையிலும், ரூ.300-க்கு விற்ற கிழங்கான், பாறை, விள மீன்கள் ரூ.500 வரையிலும், ரூ.800-க்கு விற்ற நெய் மீன், சீலா மீன்கள் ரூ.1,200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன. நண்டு, இறால்,கணவாய் போன்ற மீன்களின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தொடர்ந்து கடல் மீன்களின் விலையில் மேலும் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது, என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்