தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு நேற்று (மே.10) ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று (மே.11) காலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.6,750-க்கும், ஒரு பவுன் ரூ.160 குறைந்து ரூ.54,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.70 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.90.50-க்கு விற்பனையாகிறது.

3 முறை உயர்வு: முன்னதாக, நேற்று அட்சய திருதியை தினத்தன்று ஒரேநாளில் தங்கம் விலை 3 முறை உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இதன்படி, நேற்று காலை 6 மணிக்கு தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,660-க்கு விற்பனையானது. பின்னர், காலை 8 மணிக்கு தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.6,705-க்கு விற்பனையானது. இதற்கிடையே, பிற்பகல் மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. அப்போது, கிராம் ஒன்றுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.6,770-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.1,240 அதிகரித்து ரூ.54,160-க்கு விற்பனையானது. இதேபோல் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.90-க்கு விற்பனையானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE