ரான்பாக்ஸி: செபி-யிடம்குவியும் புகார்கள்

ரான்பாக்ஸி லேபரட்டரீஸ் நிறுவன பங்குகளை சன் பார்மா வாங்கிய விவகாரம் தொடர்பாக பங்கு பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) மிக அதிக எண்ணிக்கையில் புகார்கள் வந்துள்ளன.

ரான்பாக்ஸி பங்குகளை சன் பார்மா வாங்குவதற்கு முன்பாகவே இந்த விஷயம் வெளியில் கசிந்துள்ளது. இந்த விஷயத்தில் உள்பேர வர்த்தகம் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இந்த பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை செபி திரட்டி வருகிறது.

மார்ச் 31 முதல் ஏப்ரல் 4 வரை ரான்பாக்ஸி பங்கு விலை 26 சதவீதம் உயர்ந்துள்ளது.

பங்குச் சந்தை தரகர்கள், முதலீட்டாளர் சங்கங்கள், பதிலி ஆலோசனை நிறுவனங்கள், நிதி நிர்வகிக்கும் நிறுவனங்கள், அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. இதனிடையே இந்தப் புகாரை சன் பார்மா நிறுவனம் மறுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE