மதுரை: கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் வெயிலுக்கு தினமும் 8 டன் முதல் 10 டன் காய்கறிகள் கெட்டுப் போவதாக மதுரை மாட்டுத்தாவணி காய்கறி வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். நஷ்டத்தால் பல வியாபாரிகள் கடை போடுவதை தவிர்த்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 100 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆந்திரா, கர்நாடகா, ஓசூர், ராய்க்கோட்டை, ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், திண்டுக்கல் மற்றும் வட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. நாளொன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு காய்கறி வியாபாரிகள், மளிகைக் கடைக்காரர்கள், பொது மக்கள் காய்கறி வாங்க வருகிறார்கள். கடந்த பிப்ரவரி முதல் அதிகரித்த வெயிலின் தாக்கம் தறபோது வரை குறையவில்லை.
கத்தரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இதனால் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகை 40 சதவீதம் குறைந்து விட்டது. மார்க்கெட்டுக்கு உள்ளேயே வெயிலுக்கு அஞ்சி பல வியாபாரிகள் கடை போடுவ தில்லை.
இது குறித்து மாட்டுத்தாவணி அனைத்து வியாபாரிகள் கூட்ட மைப்புத் தலைவர் காசிமாயன் கூறியதாவது: நான் 17 வயதில் இருந்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். தற்போது 55 வயதாகிறது. இதுவரை இப்படியொரு வெயிலை அனுபவித்ததில்லை. வழக்கமாக மற்ற நாட்களிலேயே 2 முதல் 3 டன் காய்கறிகள் அழுகி விடும்.
அவற்றை குப்பையில் கழிவுகளாக கொட்டி விடுவோம். தற்போது தினமும் 8 டன் முதல் 10 டன் காய்கறிகள் வெயிலுக்கு கெட்டுப் போகின்றன. கடைகளில் அமர்ந்து வியாபாரம் பார்க்க முடியாத அளவு அனல் காற்று வீசுகிறது. தரையில் கொட்டி வியாபாரம் செய்யும் போது காய்கறிகள் விரைவாக கெடுகின்றன.
விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு, காய்கறி களைப் பறித்து சந்தைக்கு அனுப்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய தக்காளி ஓரளவு வெயிலை தாக்குப்பிடிக்கிறது. ஆனால் உள்ளூர் தக்காளி தரையில் கொட்டினாலே சுட்ட தக்காளி ஆகி விடுகிறது. உள்ளூர் தக்காளி செடிகளில் இருந்து பறிக்கக் கூடியது. தரையில் வெந்து போய் கிடக்கக் கூடியது. அதனால், இந்த வெயிலுக்கு தாக்குப் பிடிக்காமல் கெட்டுப் போகிறது.
மார்க்கெட்டில் இருந்து சிறு, குறு வியாபாரிகள் வாங்கி செல்லும் காய்கறிகள் கால் பங்கு சேதமடைந்து விடுகிறது. அதனால், வியாபாரிகள் காய்கறிகளை விற்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். இந்த வெயிலால் விவசாயிகள், பெரு வியாபாரிகள், சிறு குறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் வரை அனைத்து தரப்பினரும் பாதிப்பைச் சந்திக்கின்றனர்.
இதனால், வியாபாரிக ளுக்கும், கடைக்காரர்களுக்கும் காய்கறி விற்பது, வாங்குவது சம்பந்தமாக பிரச்சினை ஏற்படுகிறது. விவசாயிகள் இந்த வெயிலுக்கு காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வருவதே பெரிய பாடு. பொதுமக்கள் வாங்கிச் சென்று பிரிட்ஜில் வைக்கும் காய்கறிகளும் கெட்டு விடுகின்றன. கத்திரிக்காய் வெம்பிப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
17 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago