இந்தியாவில் தங்கத்தின் தேவை 8% அதிகரிப்பு - உலக தங்க கவுன்சில்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியாவில் தங்கத்தின் தேவை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கியில் தங்க கொள்முதல் நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டில் 19 டன்களுக்கு மேல் கடந்துள்ளதாக தகவல்.

இது குறித்த அறிக்கையில் உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள விவரங்கள் குறித்து பார்ப்போம். இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அண்மையில் எட்டியது. இருந்தும் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு காலமான ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் தங்கத்தின் தேவை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தங்க முதலீடு மற்றும் ஆபரணம் என நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் தங்கத்தின் தேவை 136.6 டன்களை எட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 126.3 டன்களாக தங்கத்தின் தேவை நாட்டில் இருந்துள்ளது. நகர பகுதிகளுக்கு நிகராக கிராமங்களிலும் தங்கத்தின் தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவையில் பெரிய அளவில் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறுவது இதற்கான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல ரிசர்வ் வங்கி நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டில் 19 டன் தங்கத்தை கொள்முதல் செய்துள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE