மஹிந்திரா XUV 3XO இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

By செய்திப்பிரிவு

மும்பை: மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO வாகனம் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த காம்பேக்ட் எஸ்யூவி ரக வாகனத்தின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த கார் குறித்து பல்வேறு டீசர்கள் வெளியான நிலையில் சந்தையில் தற்போது அறிமுகமாகி உள்ளது.

வரும் மே 15-ம் தேதி முதல் இந்த காருக்கான முன்பதிவு தொடங்குகிறது. மொத்தம் 18 வேரியன்ட்களில் இந்த கார் கிடைக்கிறது. ‘எம்எக்ஸ்1, எம்எக்ஸ்2, எம்எக்ஸ்2 புரோ, எம்எக்ஸ்3, எம்எக்ஸ்3 புரோ, ஏஎக்ஸ்5, ஏஎக்ஸ்5 எல், ஏஎக்ஸ்7, ஏஎக்ஸ்7 எல்’ என 9 வகையிலான மாடல்களில் இந்த கார் வெளிவந்துள்ளது.

இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.7.49 லட்சத்தில் தொடங்குகிறது. டாப் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.15.49 லட்சம். எக்ஸ்யூவி 300 ரக காரின் ரீப்ளேஸ்மெண்டாக இந்த மாடல் அறிமுகமாகி உள்ளது. முந்தைய மாடலை காட்டிலும் பல்வேறு அம்சங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காரின் டிசைனை (வடிவமைப்பு) பொறுத்தவரையில் பம்பர் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளது. புதிய எல்இடி டிஆர்எல் மற்றும் எல்இடி ஹவுசிங் லேம்ப் இடம்பெற்றுள்ளது. பின்பக்க டெயில் லேம்ப் ‘சி’ வடிவில் உள்ளது. புதிய செட் அலாய் வீல்கள் டாப் வேரியன்ட் மாடல்களில் இடம்பெற்றுள்ளது.

காரின் உட்புறத்தில் பனரமிக் சன்ரூஃப், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், 10.25 இன்ச் ஸ்க்ரீன் கொண்டுள்ளது இன்ஃபோடைமென்ட் சிஸ்டம். லெவல் 2 ADAS (அட்வாஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) டாப் வேரியன்ட் மாடல்களில் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில் ஆறு ஏர்பேக்ஸ், ISOFIX மவுண்ட்ஸ், ரியர் டிஸ்க் பிரேக்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் போன்றவையும் இடம்பெற்றுள்ளது. 7 வண்ணங்களில் இந்த கார் கிடைக்கிறது.

குறிப்பிட்ட மாடல் கார்கள் ட்யூயல்-டோன்களில் கிடைக்கிறது. இந்த கார் டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி ப்ரிஸா போன்ற கார்களுக்கு சந்தையில் போட்டியாளராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE