பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் ஒரு டன் இளநீர் பண்ணை விலை ரூ.15 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இளநீரை விரும்பிப் பருகி வருகின்றனர். இந்த வாரம் நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டுரக மரங்களின் இளநீர் விலை, கடந்த வார விலையைவிட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.39 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் இளநீரின் விலை ரூ.15 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநீர் வரத்து மிகமிக குறைந்து காணப்படுவதால், பண்ணைகளில் இளநீர் வாங்குவதில் வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதனால் கூடுதல் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். கடுமையான இளநீர் தட்டுப்பாடு காரணமாக வரும் வாரத்தில் இளநீரின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே தென்னை விவசாயிகள் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago