சென்னை: சென்னையின் மின் தேவை 4,335 மெகா வாட் என்னும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தின் சராசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது.தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது.இதனால் தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு 40 கோடி யூனிட்டை தாண்டி பதிவாகி வருகிறது. இதற்கேற்ப தமிழகத்தின் மின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த 8-ம் தேதி 20,125 மெகா வாட் என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.இதைத் தடையின்றி மின்வாரியம் பூர்த்தி செய்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ( ஏப்.24 ) சென்னையின் மின் தேவையும் 4,335 மெகா வாட் என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதையும் தடையின்றி பூர்த்தி செய்ததாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி 4,330 மெகா வாட் என்பதே சென்னையின் உச்ச பட்ச மின் தேவையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago