கோவை விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் பயணிகள் எண்ணிக்கை 29 லட்சத்தை கடந்தது!

By இல.ராஜகோபால்

கோவை: கோவை விமான நிலையத்தில் கடந்த நிதியாண்டு பயணிகள் எண்ணிக்கை 29,04,611-ஆக உயர்ந்துள்ளது. இடநெருக்கடிக்கு பிரச்சினைக்கு தீர்வு காண உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சர்வதேச விமான போக்குவரத்து வசதியை அதிகரிக்கவும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு கரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ளது கோவை சர்வதேச விமான நிலையம். கடந்த 2023 - 24-ம் நிதியாண்டில் விமான நிலையத்தை 29,04,611 பேர் பயன்படுத்தி உள்ளனர்.இது 2022 - 23 நிதியாண்டில் 25,57,263 என இருந்தது. கடந்தாண்டு கோவை விமான நிலையம் பயணிகள் கையாளுகையில் 13.6 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேற்குறிப்பிட்ட அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சென்னை விமான நிலையம் 14.2 சதவீதம், திருச்சி 16.5 சதவீதம், மதுரை 13 சதவீதம், தூத்துக்குடி 1.4 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

சேலம் விமான நிலையத்தில் 2022 - 23 நிதியாண்டில் பயணிகள் எண்ணிக்கை 318-ஆக இருந்தது.2023-24-ல் 42,568-ஆக உயர்ந்துள்ளது. விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். கோவை போன்ற விமானநிலையங்களில் இடநெருக்கடி பிரச்சினை அதிகரித்து வருவதால் பேருந்து நிலையங்களில் உள்ளதை போல் காட்சியளிக்கிறது.

‘கொங்கு குளோபல் போரம்‘ கூட்டமைப்பின் இயக்குநர் சதீஷ் கூறியதாவது: கோவை சர்வதேச விமான நிலையம் நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தற்போது உள்ள புறப்பாடு பகுதி பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த டெர்மினல் கட்டிடத்தின் அதிகபட்ச பயணிகள் கையாளும் அளவை விட பல லட்சம் பயணிகள் அதிகமாக விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து அதிகம் காணப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களை நிறுத்த முடியாமலும், கட்டிட வளாகத்தில் நெருக்கடியால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து விரைவில் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதனால் சர்வதேச தர அந்தஸ்துக்கு ஏற்ப உள் கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கு பல்வேறு மேம்பாட்டு வசதிகள் கிடைக்கும். மேலும், கோவையில் இருந்து துபாய் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்