இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்தியா - ரஷ்யா கூட்டு சேர்ந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கி பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்தன. இந்தியாவின் பிரம்மபுத்ரா நதி மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா நதி ஆகிவற்றின் பெயர் சேர்க்கப்பட்டு பிரம்மோஸ் பெயர் உருவாக்கப்பட்டது.

நிலம், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர் விமானங்களில் இருந்து ஏவும் வகையிலான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. இந்த ஏவுகணை 2.8 மேக் வேகத்தில் (ஒலியைவிட 3 மடங்கு அதிகம்) சீறிப்பாய்ந்து 290 கி.மீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் படைத்தது.

தென்சீனக் கடல் பகுதியில் சீன கடற்படை ஆதிக்கம் செலுத்துவதால், எதிரிநாட்டு போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியாவிடம் இருந்து வாங்க பிலிப்பைன்ஸ் முன்வந்தது. 3 யூனிட் பிரம்மோஸ் ஏவுகணை கருவிகள் மற்றும் ஏவுகணைகளை 375 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியாவிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் செய்யப்பட்டது.

அதன்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மேஸ் ஏவுகணைகளின் முதல் பேட்ஜ், பிலிப்பைன்ஸ்நாட்டுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய விமானப்படையின் ஜம்போ விமானம் சி-17 குளோப் மாஸ்டர் விமானத்தில், பிரம்மோஸ் ஏவுகணைகள் நேற்று பிலிப்பைன்ஸ் சென்றடைந்தன. இது பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் ஏற்றுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜென்டினா உட்பட இன்னும் சில நாடுகளும் இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க விருப்பம் தெரிவித்துஉள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

மேலும்